Advertisment

"அவங்க சொல்ல சொன்னாங்க...அதனால பேசினேன்..." - சதிஷ் விளக்கம்

sathish explained about his speech controversy in sunny leone movie audio launch

Advertisment

வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடித்துள்ளார்.

'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 02.11.2022 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில்சன்னி லியோன் உட்படப் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஸ், “மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க” எனப் பேசியதற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளது.

மேலும் திரைப் பிரபலங்கள் இயக்குநர் நவீன், உள்ளிட்ட சிலர் சதீஷின் பேச்சுக்குத்தங்களது கண்டனங்களைத்தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தற்போது அவரைப் பற்றி எழுந்துள்ள கண்டங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஓ மை கோஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவில் என் அருகில் நடிகை தர்ஷ குப்தா அமர்ந்திருந்தார். அவர் என்னிடம்,என்னைப் பாருங்க... சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. சன்னியை பார்த்த தர்ஷா அப்சட் ஆகிட்டதா என்னிடம் சொன்னாங்க. மேலும் தர்ஷா அப்சட் ஆனதை மேடையிலும் என்னை சொல்ல சொன்னாங்க. அதன் காரணமாகத்தான் நானும் மேடையில் பேசினேன்.

Advertisment

ஆனால் என் பேச்சிக்கு சிலர், பெண்கள் உடை உடுத்துவது அவர்களின் உரிமை எனக் கருத்து தெரிவித்தனர். அது உண்மைதான். பெண்களும் சரி ஆண்களும் சரி உடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம்தான். ஆனால் இது இரு நண்பர்கள் இடையே ஜாலியா பேசினது, தர்ஷா சொல்ல சொன்னாங்க அதனால அவங்க சம்மதத்துடன் தான் மேடையில் பேசினேன். ஆனால் சில பேர் நான் எல்லாரையும் குறிப்பிடுவது போல் சீரியஸாக எடுத்துக்கிட்டாங்க. இருப்பினும் இதனை நான் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறேன். அதேபோல் நிறைய நல்ல விஷயங்களையும் பேசியிருக்கிறேன். இந்த விஷயத்திற்கு ரியாக்ட் பண்ணது போல் அந்த நல்ல விஷயத்துக்கும் ரியாக்ட் பண்ணி பின்பற்றினால் நல்லாருக்கும்" எனக் கூறியிருந்தார்.

actor sathish sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe