சந்தானம், சூரிக்கு பிறகு காமெடியில் தனெக்கென்று ஒரு இடத்தை பிடித்து நடித்து வரும் காமெடி நடிகர் சதீஷ் மெரினா, எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிற நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ மேலும், ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்று 14ஆம் தேதி டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். உலகமே காதலர் தினத்தை கொண்டாடும் நிலையில், சதீஷ் மட்டும் நண்பர்கள் தினத்தை கொண்டாடி டுவிட் செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.