Advertisment

“நான் சினிமாவுக்குள் வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன்” - சதீஷ்

sathish about vijay

Advertisment

வெங்கி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. இதில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய சதீஷ்நிறைய பேருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் கையிலிருந்துதான் இயக்குநர் இப்படத்திற்கான செக் வாங்கினார். அவர் தீவிர விஜய் ரசிகர். விஜய் சார் கட்சி பெயர் அறிவிப்பதற்கு முன்னாடி நாள் என்னை அழைத்திருந்தார். பார்த்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட்டுப்பா...’. இந்த வார்த்தை அவர் சொல்லி கேட்கும்போது, உண்மையிலே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவர் காஞ்ஜூரிங் கண்ணப்பன் பார்த்திருக்கார், அதை பற்றி என்னிடம் பேச வேண்டும் என நினைத்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய ஒரு வெற்றியாக இருந்தது. நான் சினிமா வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன். அவர் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒரு ரசிகனாக அவர் அரசியலிலும் வெற்றி பெற வேண்டிக்கிறேன்” என்றார்.

கான்ஜூரிங் கண்ணப்பன் கடந்த ஆண்டுடிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. சதிஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பேய் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay actor sathish
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe