ADVERTISEMENT

நடிகர் சதீஷை புன்னகைக்க வைத்த தேவதை!

02:55 PM Nov 04, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தொடர்ந்து பைரவா, கத்தி, ரெமோ, தமிழ்ப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

நடிகர் சதீசுக்கும், சிக்ஸர் படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் ஆனது. தற்போது சதீஷ்- சிந்து தம்பதியருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், மஞ்சிமா மோகன், கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பிரபலங்களிடருந்தும் ரசிகர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT