படமாகும் ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை....'சசிலலிதா' என்ற பெயரில் ஆரம்பம் !

மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தமிழில் பாரதிராஜா, விஜய் பிரியதர்ஷினி, கெளதம் மேனன் ஆகியோர் படமாக்கி வருகின்றனர். இதையடுத்து தமிழ் இயக்குனர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு இயக்குனர்களும் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

sasilalitha

இதில் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'சசிலலிதா' என்ற பெயரில் இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி இப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா இருவரின் படங்களும் உள்ளன.

gautham menon jayalalitha biopic sasilalitha
இதையும் படியுங்கள்
Subscribe