Advertisment

வித்தியாசமான கதைக்களத்தில் சசிகுமார்... கவனம் ஈர்க்கும் 'காமன் மேன்' டைட்டில் டீசர்!

sasikumar starring Common man movie tittle teaser goes viral

தமிழ் சினிமாவில்இயக்குநராக அறிமுகமான சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'ராஜவம்சம்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8364f40a-38d6-4f85-b361-7a1244b12004" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_12.jpg" />

Advertisment

இதனைத்தொடர்ந்து இயக்குநர் சத்யசிவா இயக்கும் 'காமன் மேன்' படத்தில் சசிகுமார் நடிக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் வெளியான 'கழுகு' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் 'கழுகு 2', 'சவாலே சமாளி' ஆகிய படங்களைஇயக்கியுள்ளார். இதையடுத்து தற்போது சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் நேற்று(23.12.2021) வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இந்த டீசர் தற்போது அனைவரின் கவனத்தையும்ஈர்த்துவருகிறது.

'காமன் மேன்' படத்தின் டைட்டில் டீசர் யூடியூப் தளத்தில்,6 லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathyasiva comman man Sasikumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe