Sasikumar

Advertisment

செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கதிர்வேலு இயக்கத்தில், சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படம், நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சசிகுமார், "‘ராஜவம்சம்’ கூட்டுக் குடும்பத்தைப் பற்றி பேசும் படம். கதிர் என்கிட்ட கதை சொன்ன உடனேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். நாங்கள் அனைவரும் குடும்பமாக இணைந்துதான் இந்தப் படத்தில் நடித்தோம். இன்றைக்கு திரையரங்கில் படத்தை வெளியிடுவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ‘ராஜவம்சம்’ படத்தை திரைக்குக் கொண்டுவர தயாரிப்பாளர்தான் மிக சிரமப்பட்டுள்ளார். ஒரு தயாரிப்பாளராக எனக்கு அது தெரியும். நான் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும்போது, ‘நீ என்ன வேண்டுமானாலும் பண்ணு... ஆனால், படம் மட்டும் தயாரிக்காத’ என்று ரஜினி சார் சொன்னார். அவர் கூறியதை நான் அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது கேட்கிறேன்.

படம் தயாரிப்பில் உள்ள கஷ்டங்களை நான் பார்த்துள்ளேன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன், ஒரு படம் வெளியாகி அடுத்தடுத்த படங்கள் எடுக்க வேண்டும் என்றால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.