Advertisment

மறைந்த இயக்குநரை நினைத்து வருந்திய சசிகுமார்!

 sasikumar shared about passed away director

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது.

Advertisment

மனிதம் மற்றும் மதநல்லிணக்கத்தை பற்றி பேசியிருந்த இப்படம் திரைப்பட விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு சசிகுமார் தங்க செயின் பரிசாக வழங்கினார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான சசிகுமார் “இந்தப் படத்தை பார்ப்பதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்போது இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் இருந்திருந்தால் இந்த படத்தை பார்த்து பாராட்டியிருப்பார்.இயக்குநரின் தொடர்பு எண்ணை வாங்கிப் பேசிப் பாராட்டி மகிழ்ந்திருப்பார்” என்றார்.

Sasikumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe