sasikumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போதுள்ள சூழலில் வாழ்வாதாரத்திற்கே வழியின்றி தவிக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'வாழ்க விவசாயி'. கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் பி.எல் பொன்னி மோகன் இயக்கியுள்ளார். நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், 'ஹலோ' கந்தசாமி, ஸ்ரீகல்கி, 'மதுரை' சரோஜா அம்மாள், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் வினோத், சந்தியா, ஆனந்தரூபிணி கவிஞர் விக்கிரமாதித்யன், விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக் குழுவை இயக்குநர், நடிகர் சசிகுமார் வாழ்த்தியுள்ளார். சசிகுமார் ஊக்கப்படுத்திப் பாராட்டியதில் புதுமகிழ்ச்சியில் திளைத்த படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை இராஜபாளையம், சொக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார விவசாய கிராமங்களில் முடித்துவிட்டு தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை விறுவிறுப்பாக நடத்திவருகின்றனர்.