ராமநாதசுவாமி கோயிலில் சசிகுமார் சாமி தரிசனம்

sasikumar at rameshwaram temple

சசிகுமார் கடைசியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி, எஸ்.எஸ். ராஜமௌலி, சூர்யா, நானி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது பாராட்டுகளை பெற்றது.

இப்படத்தை அடுத்து ‘ஃப்ரீடம்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். சத்யசிவா இயக்கியுள்ள இப்படம் த்ரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ளது. இப்படம் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜெய் பீம் மூலம் கவனம் பெற்ற லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் சசிகுமார் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவரை கண்டதும் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Rameswaram Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe