Advertisment

பாரதிராஜாவின் கனவு படத்தை சத்தமில்லாமல் இயக்கும் சசிகுமார்..?

sasikumar plans direct by kuttraparambarai story

Advertisment

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். சசிகுமார் படம் இயக்குவதை விட்டு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'ராஜவம்சம்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8ea4c43a-17d8-430f-98c8-65ae0527c008" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_45.jpg" />

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் கனவு படமான குற்றப்பரம்பரை கதையை சசிகுமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதையை இயக்குநர் வேல ராமமூர்த்தி எழுத சசிகுமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இருவருக்கும் இடையே குற்றப்பரம்பரை கதை இயக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் சசிகுமார் இப்படத்தின் பணிகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

kuttra parambarai Bharathi Raja Sasikumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe