sasikumar next to pair with simran

‘அயோத்தி’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நந்தன் படத்தில் நடித்திருந்தார் சசிகுமார். கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மேலும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பலரது பாராட்டினைப் பெற்றது.

Advertisment

இந்த நிலையில் சசிகுமாரின் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கும் இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும் யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் மூலம் சசிகுமார் - சிம்ரன் இருவரும் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளனர். இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தனர். 90களின் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் கடைசியாக அந்தகன் படத்தில் நடித்திருந்தார். இப்போது தனது கணவர் தீபக் பஹா தயாரிப்பில் ‘தி லாஸ்ட் ஒன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.