sasikumar

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'நாடோடிகள் 2'. இயக்குனர் பொன்ராம் இயக்கி, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்.ஜி.ஆர். மகன்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. மேலும் இவர், ராஜவம்சம், பரமகுரு, கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Advertisment

'பகைவனுக்கு அருள்வாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் அனீஸ் இயக்கவுள்ளார். இவர் நடிகர்ஜெய் நடிப்பில் வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தை இயக்கியவர் ஆவார். 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன், பிந்துமாதவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்தகவலை நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment