sasikumar nandhan movie release update

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமான சசிகுமார்கடைசியாககருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நடிகராக 25வது படமாக அமைந்திருந்தது.இப்படத்தைதொடர்ந்து சசிகுமாரின் நடிப்பில்ரிலீஸுக்குதயாராகியுள்ள திரைப்படம் ‘நந்தன்’. இப்படத்தில் சமுத்திரக்கனி,ஸ்ருதிபெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

‘இரா’என்டர்டெயின்மென்ட்தயாரித்துள்ள இப்படத்திற்குஜிப்ரான்இசையமைத்துள்ளார். இப்படத்தின்படப்பிடிப்பு தளத்தில்எடுத்த புகைப்படத்தை சமுத்திரக்கனி நேற்று தனதுஎக்ஸ்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின்ரிலீஸ்தேதி குறித்த அறிவிப்பு புதியபோஸ்டருடன்வெளியாகியுள்ளது.போஸ்டரில்இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தின் இயக்குநர் இரா.சரணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘உடன் பிறப்பே’ படத்தில் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்திருந்தனர். 2021ஆம் ஆண்டு நேரடியாக வெளியான இப்படம் கலவையானவிமர்சனத்தைபெற்றது குறிப்பிடத்தக்கது.