sasikumar in Naan Mirugamaai Maara movie release update released

Advertisment

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நான் மிருகமாய் மாற'. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹரிப்ரியா, விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் 'நான் மிருகமாய் மாற' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இப்படம் முதலில் 'காமன் மேன்' என தலைப்பில் உருவாகி வந்தது. பின்பு இந்த தலைப்பை ஏற்கனவவே ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் முறையாக பதிவு செய்துள்ளதால் இப்போது 'நான் மிருகமாய் மாற' என மாற்றப்பட்டுள்ளது.