sasikumar liju mol jose movie freedom first look poster update

அயோத்தி பட வெற்றியைத்தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ஸ் கடந்த மாதம் வெளியானது.

Advertisment

இதனிடையே சத்யசிவா இயக்கத்தில் த்ரில்லர் ட்ராமா ஜானரில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தை கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த சத்யசிவா இயக்க 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது. பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெய் பீம் மூலம் கவனம் பெற்றலிஜோ மோல் ஜோஸ் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு ஃப்ரீடம் (Freedom) எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பிற்கு கீழ் டேக் லைனாக ஆகஸ்ட் 14 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. போஸ்டரை பார்க்கையில் அழுத்தமாக ஒரு அரசியல் சம்பவத்தைப் பேசுவது போல் தெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment