sasikumar Lijomol Jose movie update

பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

Advertisment

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களின்காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது.

Advertisment

90களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது. இப்படத்தின் தலைப்பு, டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.