Advertisment

''இனி இம்மாதிரி படங்களில் நான் நடிப்பேன். ஏன் தெரியுமா..?'' - சசிகுமார் 

'கென்னடி கிளப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது விழாவில் நடிகர் சசிகுமார் பேசும்போது....

Advertisment

sasikumar

''கென்னடி கிளப்' படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். இது இவர்களின் பயோ பிக். இதில் கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன். கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்றுதான் இந்த நிஜ கபடி வீராங்கனைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளிலும் வென்றிருக்கிறார்கள். இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். அதில் கொஞ்சம் சுயநலமும் உள்ளது. அருவா, சண்டை, டூயட் என நடித்து போர் அடித்துவிட்டது. இப்படம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றதால்தான் இதன் மூலம் எனக்கு நிறைய இம்மாதிரியான படங்கள் கிடைக்கும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Z3deASrIIi8.jpg?itok=qk4kvXDa","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe