/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/480_6.jpg)
தமிழ் சினிமாவில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். ஆனால் இயக்குவதை விட தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் 'நா நா' மற்றும் ' மற்றும் 'காமன் மேன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் ஹேமந்த் இயக்கத்தில் 'காரி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகின.
இந்நிலையில் 'காரி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரில் குதிரை போட்டி மற்றும் ஜல்லிக்கட்டு பற்றியும் பேசியுள்ளனர். மேலும் காதல், ஆக்ஷன் என கலந்து கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)