sasikumar joins diector Sathyasiva new movie

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் 'ராஜவம்சம்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="74241a58-81f1-4561-a28e-a74bc948e005" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_3.jpg" />

Advertisment

இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் சத்யசிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான கழுகு திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சத்யசிவா கழுகு 2, சவாலே சமாளி ஆகிய படங்களைஇயக்கியுள்ளார். இதையடுத்து சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.