Advertisment

தனுஷ் படத்தில் ஒரே நேரத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள் - கெளதம் மேனன் அறிவிப்பு 

dhanush

நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகனாக தனுஷ், நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். தர்பூகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள இப்படப்பிடிப்பில் புதியதாக இயக்குனர், நடிகர் சசிகுமார் ஸ்பெஷலாக இணைந்துள்ளதாகவும், அதுவும் ஒரே நேரத்தில் மூன்று இயக்குனர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளதை திடீர்ரென்று உணர்ந்துள்ளதாகவும் கெளதம் மேனன் தான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய போஸ்டர் வரும் 20ஆம் தேதி வெளியாகிவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Danush ennainokkipayumthotta gauthammenon
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe