/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_68.jpg)
      style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="6542160493"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் பேட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் லக்னோவிலும், வாரணாசியிலும் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினி, திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் ஏற்கனவே ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா ஆகிய இரண்டு நாயகர்களும் நடித்துவரும் நிலையில் தற்போது இவர்களுடன் இன்னொரு நாயகனும் இணையவுள்ளார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராக நடிகர் சசிகுமார் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் திரிஷாவுக்கு அண்ணனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சசிகுமார் ஏற்கனவே ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
 Follow Us