sasikumar in farming

தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சசிகுமார். இவர் பாலாவின் சேது படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் அதில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து படத்தைத் தயாரித்தும் இருந்தார். இதையடுத்து தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘வெற்றிவேல்’, ‘குட்டி புலி’, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

கடந்த வருடம் மந்திர மூர்த்தி இயக்கத்தில் இவர் நடித்த ‘அயோத்தி’ படம் விமர்சனம் ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது. பின்பு கடந்த மே மாதம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் படத்தில் சூரி, உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவரது சொந்த நிலத்தில் நாற்று நடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “எங்க வயலில் நடவு...வயலும் வாழ்வும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment