Advertisment

சசிகலா வாழ்க்கையை படமாக்கும் சர்ச்சை இயக்குனர் !

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் நிலையில் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார்.

Advertisment

sasikala

இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். ராம்கோபால் வர்மா சில ஆண்டுகளுக்கு முன் ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூக வலைதளத்திலும் பெரும்சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. மேலும் ராம்கோபால் வர்மா சசிகலா பற்றி பேசியபோது.... "சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்" என்றார்.

Advertisment

ramgopal varma sasikala biopic Lakshmi NTR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe