Skip to main content

காதலியை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்! 

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
sharwANAND

 

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்த். தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். 

 

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படம் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கு விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் தான் நடித்திருந்தார். 

 

36 வயதாகும் சர்வானந்துக்கு, திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயது தோழியை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். திருமண தேதி விரைவில் வெளியாக உள்ளது. சர்வானந்த் தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்