style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் அடுத்ததாக நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் தடைகளை மீறி மேற்கொள்ளும் இசைப்பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் வசந்தபாலன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை பார்த்து சமீபத்தில் பாராட்டினார். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் கடைசியாக இப்படத்தில் 'மாயா மாயா' என தொடங்கும் பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி 'சர்வம் தாள மயம்' உலகமெங்கும் வெளியாகவுள்ளது.