Skip to main content

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் கூட்டணியில் உருவான 'சர்வம் தாள மயம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
sarvam thaala mayam

 

 

 

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் அடுத்ததாக நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் தடைகளை மீறி மேற்கொள்ளும் இசைப்பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் வசந்தபாலன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை பார்த்து சமீபத்தில் பாராட்டினார். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் கடைசியாக இப்படத்தில் 'மாயா மாயா' என தொடங்கும் பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி 'சர்வம் தாள மயம்' உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கிய ஜி.வி பிரகாஷ்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து கவனத்தை பெற்று வரும் ஜி.வி பிரகாஷ் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக ப்ரொவோக் இதழ் (Provoke  magazine) சிறந்த நடிகருக்கான விருதை ஜிவி - க்கு வழங்கியுள்ளது.

 

gv prakash

 

 

சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில்  இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்  ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்டு உருவான சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். 

 

Next Story

'எப்பவுமே இதற்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்' - நடிகை அபர்ணா பாலமுரளி திட்டவட்டம்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
aparna

 

 

'எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி தன் பட அனுபவங்கள் குறித்து பேசும்போது.... ''சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் மாணவர் உறவை பற்றி பேசும் படம். மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் 'எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்" என்றார்.