Advertisment

மிரட்டும் 'சார்பட்டா பரம்பரை' ட்ரைலர்!

arya

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தை கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisment

தற்போது கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஜுலை 22ஆம் தேதி ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் இன்று (13.07.2021) வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா, பா. ரஞ்சித், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார்.

Advertisment

Actor Arya Pa Ranjith
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe