bshd

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில்கடைசியாக வெளியான படம் ‘காலா’. 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் படத்தினையும் இயக்காத ரஞ்சித், தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் படம் இயக்கும் முயற்சியில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

பின்னர் இத்தகவலை இயக்குநர் ரஞ்சித் உறுதி செய்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இப்படமானது உருவாகி வந்தது. 'சார்பட்டா பரம்பரை' எனப் பெயரிப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து;இணையத்தில் வைரலானது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெறும் நிலையில், ‘சார்பட்டா’ படத்தின் கதாபாத்திர அறிமுகவீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில்...

vzvz

Advertisment

ஆர்யா - கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகி துஷாரா விஜயன் - மாரியம்மாளாகவும், பசுபதி - ரங்கன் வாத்தியாராகவும், ஜான் கொக்கன் - வேம்புலியாகவும், கலையரசன் - வெற்றி செல்வனாகவும், சந்தோஷ் - ராமனாகவும், காளி வெங்கட் - கோனியாகவும், டைகர் கார்டன் தங்கதுரை - டைகர் கார்டன் தங்கமாகவும், ஜான் விஜய் - கெவின் (எ) டாடியாகவும் நடித்துள்ளதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.