Advertisment

மீண்டும் ஏறி அடிக்க வரும் கபிலன்; உருவாகும் 'சார்பட்டா பரம்பரை 2' - வெளியான அறிவிப்பு

sarpatta 2 update

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், ஆர்யாவைவைத்து இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாகஓடிடியில் வெளியானது. இதில் துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட்உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே 9 ஸ்டூடியோஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தைவட சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.

Advertisment

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களைத்தெரிவித்தார். மேலும் விமர்சன ரீதியாகவும் பலரது வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம்'சார்பட்டா பரம்பரை 2' உருவாகவுள்ளதாகத்தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மேட்ச் பார்க்க ரெடியா... ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட சுற்று 2" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் இது வெளியாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்பா. ரஞ்சித், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sarpatta 2 pa.ranjith Actor Arya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe