Skip to main content

"ஆர்.ஆர்.ஆர்." படத்தால் ரிலீஸில் பின்வாங்கிய சூப்பர் ஸ்டார் படங்கள் !

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

sarkaru vaari paata and bheemla nayakmovies postponed due to RRR movie release

 

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி, பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம், ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 

ad

 

இதனிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் 'சர்க்காரு வரி பாட்ட' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ராஜமௌலி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளதால், மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வரி பாட்ட'  படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல இயக்குநர் சந்திரா சாகர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பீம்லா நாயக்' திரைப்படமும், இயக்குநர் அனில் ரவுபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ரவி தேஜ், தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப் 3' திரைப்படமும்  'ஆர்.ஆர்.ஆர்.' படத்திற்காக பொங்கல் ரிலீஸிலிருந்து பின்வாங்கியுள்ளன.

 

இந்நிலையில், 'சர்க்காரு வரி பாட்ட', பீம்லா நாயக்', ‘எஃப் 3’ ஆகிய மூன்று படக்குழுவினருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் ஒலித்த தென்னிந்திய பட பாடல்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே படத்தில் இடம்பெற்ற   ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. 

mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

டீசர் சர்ச்சை; பவன் கல்யாண் படக்குழுவினருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Pawan Kalyan's film crew Election Commission notice

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஸ்ரீலீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் நவீன் ஏர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தி்ன் டீசர் கடந்த 19ஆம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த டீசர் மூலம் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. 

அதாவது, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கவுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார். 

இந்த நிலையில், பவன் கல்யாண் நடித்திருக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில், ஒரு காட்சியில் ‘டீ கிளாஸ் ஒன்று குளோசப்பில் காட்டப்படுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணி ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பவன் கல்யாண் தனது கட்சி சின்னத்தை டீசரில் காட்டியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், “நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும், அத்தகைய விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம். அரசியல் விளம்பரம் என்றால் அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் கொடுப்போம். அவர்கள் முன்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.