sarkar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'சர்கார்' படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 2ஆம் தேதியே திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும், படத்தை முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.