style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'சர்கார்' படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 2ஆம் தேதியே திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது 'சர்கார்' படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தணிக்கை குழு ‘சர்கார்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இரட்டை அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் தீர்ந்து மீண்டும் உற்சாகமாகியுள்ளனர்.