சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார் ! (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'சர்கார்' படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பல சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது. இதனால் அக்காட்சிகளை நீக்கக் கோரி அதிமுகவினர் தொடர் போராட்டங்கள் நடத்தி, சர்கார் பட பேனர்களை கிழித்தனர். இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த பிரச்சனைகளால் முன்பு எதிர்பார்த்தை விட படத்திற்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் வசூல் அதிகரித்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் வெற்றியை நேற்று படக்குழு ஒன்றாக சந்தித்து கொண்டாடியது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்த கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர்.

sarkar vijay62 armurugadoss keerthysuresh vijay62
இதையும் படியுங்கள்
Subscribe