style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான 'சர்கார்' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான 'சிம்டாங்காரன்' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு முன்னர் அறிவித்தது. அதன்படி 'சிம்டாங்காரன்' சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக இப்பாடல் சன் குழுமத்தின் சன் நெக்ஸ்ட் ஆப் வாயிலாக மாலை 5 மணிக்கே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பெண் அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பாடல் வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யும்
{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/FsNdaw56xE0.jpg?itok=-xTB067p","video_url":" Video (Responsive, autoplaying)."]}