லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்கப்போகும் ரஜினி படத்தின் பெயர் ‘தர்பார்’ என்று இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த்தின் 167 ஆவது படம் ஆகும். மேலும் இந்தப் படத்தில் ரஜினி, போலீஸ் மற்றும் சமூக ஆர்வலர் என்று இரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

rajni darbar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தர்பார் படத்தின் போஸ்டரில், ஐபிஎஸ் பேட்ச், போலீஸ் மோப்ப நாய், கை விளங்கு, மும்பை ‘கேட் வே ஆஃப் இந்தியா’, ஏகே-47 துப்பாக்கி, புல்லட், போலீஸ் பெல்ட், தொப்பி, ஷூ, போலீஸ் ஜீப், மும்பை என்று தலைகீழாக எழுதப்பட்டு இருந்தது. போஸ்டரில் ரஜினியின் பின்னணியில் இந்தப் பொருட்கள் இருப்பதன் மூலம் கதைக்களம் இதை சுற்றிதான் இருக்கப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் போஸ்டரின் ஓர் இடத்தில் ,‘நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா, இல்ல மோசமானவனா இருக்கணுமானு நீதான் முடிவு செய்யணும்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே ரஜினி படத்தில் ‘நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்’ என்று பேசிய பஞ்ச் வசனத்தின் ஆங்கில வெர்ஸன் போல இது இருக்கிறது.

‘தளபதி’ படத்திற்குப் பின் ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் படம் இதுதான். சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து‘சர்கார்’ என்று ஒரு அரசியல் படத்தை எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து ரஜினியை வைத்து எடுக்கும் படத்திற்கு ‘தர்பார்’ என்று பெயர் சூட்டி இதுவும் ஒரு அரசியல் படம் என்று முருகதாஸ் வெளியுலகிற்குத் தெரிவித்துள்ளார். இவ்விரு படங்களும் அரசியல் படம் என்பதைத் தாண்டி மற்றுமொரு ஒற்றுமை இருக்கிறது. சர்கார், தர்பார் என்று இவ்விரு வார்த்தைகளும் பெர்ஸிய மொழி வார்த்தை. ஆனால், இந்தியா முழுவதும் அனைத்து மொழி பேசுபவர்களாலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

darbar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தர்பார் என்றால் என்ன? பெர்ஸிய மொழியில் நீதிமன்றம் என்று பொருள்படும். இந்தியாவை முகலாயர்கள் கைப்பற்றிய பின்னர் பல்வேறு பெர்ஸிய வார்த்தைகள் இந்திய மக்களின் பேச்சு வழக்கு சேர்ந்த அப்படி சேர்ந்ததில் தர்பாரும் ஒன்று. அரசர் அமைச்சர்களை சந்திக்கும் இடம் அல்லது அரசர் நீதி தரும் இடம் அல்லது விழாக்காலத்தில் பொதுமக்களை அரசர் சந்திக்கும் இடம் உள்ளிட்ட அனைத்தையும் தர்பார் என்று இந்தியாவில் அழைக்கப்பட்டுள்ளது. இதுவே ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது தொடரப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அரசியலுக்குள் நுழைய இருந்த கட்டத்தில் அவருக்கு ‘ரமணா’ என்றொரு அரசியல் படத்தை எடுத்து, நல்ல ஒரு அரசியல் வரவேற்பை பெற்றுக் கொடுத்தார் முருகதாஸ். தெலுங்கில் சிரஞ்சீவி அரசியலுக்குள் வர இருந்தபோது ‘ஸ்டாலின்’ என்றொரு அரசியல் படத்தை இயக்கி, அவருக்கும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறார் முருகதாஸ். விஜயை வைத்து கடைசியாக எடுத்த ‘சர்கார்’ படத்தில் தற்போதைய தமிழக அரசியலை பேசி, விஜய்க்கும் அரசியல் ரீதியாகப் பயன்படும் வண்ணம் படமெடுத்தார் முருகதாஸ். இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அரசியலில் நுழைய இருப்பதாகத் தெரிவிக்கும் ரஜினிக்கு ‘தர்பார்’ மூலம் நல்ல ஒரு அரசியல் தொடக்கத்தை அமத்து தருவாரா முருகதாஸ்?