Advertisment

சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதை - சரீரம் ரிலீஸ் அப்டேட்

293

ஜி.வி.பி. பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி.வி. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சரீரம்’. ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்  தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை. 

Advertisment

இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல்  இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர பிரதேசம், சித்தூர், வேலூர், பெங்களூர், பாண்டிச்சேரி மகாபலிபுரம், கோவளம், சென்னை ஆகிய இடங்களில் 65 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

முழுமையான காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் வி.டி.பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி வரிகளில், ஏழு பாடல்களும், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ்  வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  

tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe