நான்கு மொழிகளில் வெளியாகும் ‘சாரி’

saree movie update

ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சாரி’(SAAREE). இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் கதை பற்றி படக்குழு கூறுகையில் சேலை அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருகட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் ‘சாரி’ படத்தின் கதை என்கிறார்கள். இதில் கதாநாயகனாக சத்யா யாது நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளார். இப்படத்தை ‘RGV DEN’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்
Subscribe