sardar first single and teaser update out now

Advertisment

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விருமன். எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து கார்த்தி மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில்நடித்து வருகிறார்.'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்தஅறிவிப்பை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதன்படி சர்தார் படத்தின் புதிய போஸ்டரைபகிர்ந்த கார்த்தி, படத்தின்முதல் பாடல் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.