sardar 2 update

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர்.

Advertisment

முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மாற்றாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி பட கட்டங்களாகப் பல இடங்களில் நடந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளதாகப் படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.