Advertisment

'சர்தார்' பட வெற்றி - இயக்குநரை நெகிழவைத்த படக்குழு

Sardaar movie success producer gifted car to ps mithran

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="64a41614-7f9f-4f43-976d-5711f6a57f78" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_16.jpg" />

Advertisment

மேலும் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இந்நிலையில் 'சர்தார்' படத்தின் வெற்றியை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை இயக்குநர் மித்ரனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை கார்த்தி இயக்குநர் மித்ரனுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக தமிழ் சினிமாவில் படம் வெற்றியை முன்னிட்டு பரிசுகள் வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 'விக்ரம்' பட வெற்றிக்கு கமல் கார் பரிசளித்த பின்பு சமீப காலமாக பெரும்பாலும் படக்குழுவினர் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட 'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றியை முன்னிட்டு சிம்புவுக்கு ஐசரி கணேஷ் கார் வழங்கினார். தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள் இந்த பாணியை பின்பற்றி வருவதால் தற்போது அந்த லிஸ்டில் 'சர்தார்' படமும் இணைந்துள்ளது.

actor karthi ps mithran Sardar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe