Skip to main content

வெள்ளித்திரைக்கு வரும் வேட்டையன்!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி சீரியல்கள் எடுக்கப்படும் காலம் இது. ஒரு காலத்தில் சீரியல் ஹீரோக்களை திரைத்துறையில் மதிக்காத நிலை இருந்தது. ஆனால், இன்று திரையில் வெற்றிகரமாக இருக்கும் பல நாயகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள்.  கமல்ஹாசன், சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, விஷால் என பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இன்னொரு புறம் தொலைக்காட்சி நாயகர்கள் திரைக்கு வருவதும் நிகழ்ந்திருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் தொலைக்காட்சியிலிருந்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்ற உதாரணங்கள். தற்போது செந்தில், ரியோ உள்ளிட்ட சில தொலைக்காட்சி பிரபலங்களும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்த வழியில் யூ-ட்யூப் பிரபலங்களும் சினிமாவுக்கு வருவது அடுத்த கட்டமாக நிகழ்ந்து வருகிறது.
 

vettayan kavin



இப்படி ஊடக எல்லைகள் தாண்டி திறமையானவர்கள், ரசிகர்களை வசீகரிக்கக்கூடியவர்கள் வென்று வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி 'சரவணன் மீனாட்சி' தொடரில் 'வேட்டையன்' என்ற புகழ்பெற்ற பாத்திரத்தில் நடித்த கவின் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுக்கிறார். முன்பே 'சத்ரியன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக நடிப்பது 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில்தான். 'சரவணன் மீனாட்சி' தொடர் விஜய் டிவியின் மிகப்பெரிய வெற்றித் தொடராகும். பல பார்ட்கள் கண்ட இந்தத் தொடரில் 'வேட்டையன்' பாத்திரத்தில் நடித்து இளம் பெண்களை ரசிகர்களாகப் பெற்றவர் கவின். இன்றும் இவரின் அடையாளமாக வேட்டையன் பாத்திரம் இருக்கிறது.

  natpuna ennanu theriyuma



கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தப் படத்தில் 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜும் நடித்துள்ளார். ராஜு, அழகம்பெருமாள், ’மொட்ட’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தரண் இசையமைத்துள்ளார். பாடல்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய் எழுதியுள்ளனர். பல தடைகளைத் தாண்டி இன்று (17 மே 2019) வெளிவரும் இந்தப் படம் நட்பைக் கொண்டாடும் ஒரு இளமைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சந்தானம், சிவகார்த்திகேயன் என வெற்றி வரிசையில் சேர கவினை வாழ்த்துவோம்.                               

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.