‘சட்டமும் நீதியும்’; 15 வருடங்களுக்கு பிறகு நாயகனாக திரும்பியிருக்கும் சரவணன்

463

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் மூத்த நடிகர் சரவணன் நடிக்கும் வெப் சீரிஸ் ‘சட்டமும் நீதியும்’. சரவணன் திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். 

‘18 கிரியேட்டர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீரிஸ் ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. 

இந்த ரிலீஸ் அறிவிப்பு சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த நிகழ்வில் தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் சரவணனின் சாதனை கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களில் சரவணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

saravanan
இதையும் படியுங்கள்
Subscribe