Advertisment

"ரஜினி, விஜய்தான் எனக்கு..." - மனம் திறந்த சரவணன் அருள்

saravanan arul talk about legend movie rajinikanth and vijay

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் திலெஜண்ட்என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர்தமிழ்சினிமாவில் நடிகராக அறிமுகம் உள்ளார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்கியுள்ளனர்.சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசிராவ்டேலாநடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின்ட்ரைலர்நேற்று(30.5.2022) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சரவணன் அருள் உள்ளிட்ட படக்குழுவினருடன், இந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சரவணன் அருள், "திலெஜண்ட் திரைப்படம் நேர்மறையான கருத்துக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ், ஆக்ஷன், ரொமான்ஸ் ஆகிய பொழுதுபோக்குஅம்சங்கள் கொண்ட படமாக இப்படம் வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாகஉருவாகியுள்ள தி லெஜண்ட் திரைப்படம்இந்திய சினிமாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாகஅமையும். சினிமாவில் இதுதான் எனக்கு முதற்கட்டம், இப்படத்தின்வெற்றியைத்தொடர்ந்து அடுத்தகட்ட பயணம் அமையும்.என்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு வாழ்த்துகள்.ரஜினி சார், விஜய் சார் தான் எனக்கு ரோல் மாடல்" எனத் தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth actor vijay saravanan arul the legend
இதையும் படியுங்கள்
Subscribe