/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/302_21.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை 'கோபுரம் சினிமாஸ்' சார்பாக ஜி.என் அன்புச்செழியன் தமிழகத்தில் வெளியிடுகிறார். தமிழகத்தில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளுக்கு மேலாக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது 'தி லெஜண்ட்' படம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)