கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சிகளின் புகழ் பெற்ற விளம்பரங்களை கணக்கெடுத்தால், அதில் டாப் 5 இல் இடம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் விளம்பரம், குறிப்பாக 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள் நடித்த விளம்பரங்கள் வைரல் ஆகின.

Advertisment

sarvana saravanan arul

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முதலில் தனியாக நடித்த அவர், தொடர்ந்து தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்தார். அதன் பின் ஒரு படி மேலே போய் நடனமும் ஆடினார். ஒரு பக்கம் கிண்டலாகவும், மறுபக்கம் மோட்டிவேஷனாகவும் இவரது விளம்பரங்கள் வைரலாகின. தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பேச்சு எழுந்தது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் மலேஷியாவில் நடந்த செலபிரிட்டி கிரிக்கெட் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அந்நிகழ்வின் முக்கிய ஸ்பான்சராக வலம் வந்தார். இவரது மகளின் திருமணம் குறித்த செய்திகள் வெளிவந்தபோது, பலரும் இவரது வயது குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இப்படி பிரபலமாகவே இருந்த இவர், கடந்த ஆடித் தள்ளுபடி சமயத்தில் புதிய விளம்பரங்களில் நடிக்காமல் இருக்க, 'என்னாச்சு, உடம்புக்கு ஏதும் முடியலையோ என்னவோ?' என்னும் அளவுக்கு மீம்ஸ்கள் உலவி வந்தன. இப்படி மீம் மெட்டீரியலாகவும் இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை இருந்தால் தோற்றமோ வயதோ ஒரு தடையல்ல என்னும் மோட்டிவேஷனல் ஃபிகராகவும் திகழும் இவர், ஒரு இடைவெளிக்குப் பிறகு புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த விளம்பரத்தில் அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல தொலைக்காட்சி பிரபலங்கள் நடித்துள்ளனர். சரவணன் அருள், அதில் நடித்துள்ள விதம் கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பாணியை நினைவுபடுத்துகிறது. எப்படியோ, 'தலைவன் வந்துட்டார்' என கொண்டாடுகின்றனர் சரவணன் அருள் ரசிகர்கள்.