Advertisment

'வேளச்சேரி துப்பாக்கிச் சூட்'டில் சரத்குமார்!

sarathkumar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

வி.ஆர்.மூவிஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை 'இன்பா' மற்றும் 'மயங்கினேன் தயங்கினேன்' பட இயக்குனர் எஸ்.டி. வேந்தன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிகை இனியா மனித உரிமை கழக அதிகாரியாக நடிக்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. மேலும் காஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இப்படத்திற்கு 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற டைட்டிலை வைத்துள்ளார்கள்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

மேலும் இப்படம் குறித்து இயக்குநர் எஸ்.டி.வேந்தன் பேசும்போது.... "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. யாரும் போராடுவதில்லை. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்கம் இருக்கும் நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம். இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்" என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe