Skip to main content

'வேளச்சேரி துப்பாக்கிச் சூட்'டில் சரத்குமார்!

Published on 02/07/2018 | Edited on 03/07/2018
sarathkumar

 

 

 

வி.ஆர்.மூவிஸ் சார்பில் டி.ராஜேஸ்வரி தயாரிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' படத்தை 'இன்பா' மற்றும் 'மயங்கினேன் தயங்கினேன்' பட இயக்குனர் எஸ்.டி. வேந்தன் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிகை இனியா மனித உரிமை கழக அதிகாரியாக நடிக்கிறார். மேலும்  இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. மேலும் காஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இப்படத்திற்கு 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற டைட்டிலை வைத்துள்ளார்கள்.

 

 

மேலும் இப்படம் குறித்து இயக்குநர் எஸ்.டி.வேந்தன் பேசும்போது.... "காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை. யாரும் போராடுவதில்லை. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்கம் இருக்கும் நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம். இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்" என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.