Advertisment

சரத்குமார், விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் அப்டேட்

sarathkumar vidharth movie update

ரோஷ் குமார் வழங்கும்பி.திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் படம் ‘சமரன்’.மலையாள நடிகர்கள்ஆர். நந்தா, சித்திக் மற்றும் சிங்கம்புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். வேத் சங்கர் சுகவனம் என்பவர் இசையமைக்கிறார்.

Advertisment

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றிநடப்பதே இப்படத்தின் கதை.சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடிஉருவாகும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அதனைசஸ்பென்ஸ் கலந்துஉருவாக்கியுள்ளதாகபடக்குழு தெரிவித்துள்ளது

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

actor Sarath Kumar Actor Vidharth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe