ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சரத்குமார்

sarathkumar thanks rajinikanth

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. மேலும் திரைப் பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டிவருகின்றனர்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியிருந்தார். அத்துடன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத் குமாருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Rajinikanth actor Sarath Kumar ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe